You can post a variety of news related to our village Mathagal. (Eg: Funeral, Wedding and any other special events) Note that, any messages posted would be the responsibility of the message sender. Click here to post news.
மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கனகலிங்கம் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி (21/05/2020) மாதகல் சித்திவிநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் 2020 தொடங்கவிருந்தது, ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் காலவரையற்று பிற்போடப்பட்டுள்ளது.
மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதிய வதிவிடமாகவும் கொண்ட அக்கினேஸ் புஸ்பம் இராசேந்திரம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இலங்கையின் வடமாகாணத்தி்ன் கண்னே, மாது அகன்ற மாதகல் பதிதான், இன்று வரலாற்றுப் பிரசித்தி பெற்று விளங்கும் சம்பில்துறையான ஜம்புகோலப்பட்டணம். மாதகல் பதி தன்னிலே ஒருபுறம் மருத நிலமான பங்கப்பழனத்து உழும் உழவர்களின் வயல்களும், மறுபுறம் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமும் சூழ நிலைகொண்டுள்ள, நுணசையம்பதி வள்ளிசமேதரர் ஆலயம் அமைந்துள்ளது.
மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடாவில் ரொறண்டோ மற்றும் ஒட்டவாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்துக்குமார் சிவபாதம் அவர்கள் 11/04/2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மாதகல் - பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை வியாழக்கிழமை தொடங்கவுள்ளது, இந்நிகழ்வுக்கு 10 பேர் மட்டுமே செல்ல முடியும் மற்றும் சில கட்டுப்பாடுகளுக்கு அமைய 12 நாட்கள் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா கற்குழியை தற்கால வசிப்பிடங்களாகவும்; கொண்டிருந்த திருமதி மனோரஞ்சிதம் புண்ணியமூர்த்தி அவர்கள் சற்று முன்னர் 23-11-2019 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் வவுனியாவில் இறைபதம் அடைந்தார்.