இலங்கையின் வடமாகாணத்தி்ன் கண்னே, மாது அகன்ற மாதகல் பதிதான், இன்று வரலாற்றுப் பிரசித்தி பெற்று விளங்கும் சம்பில்துறையான ஜம்புகோலப்பட்டணம். மாதகல் பதி தன்னிலே ஒருபுறம் மருத நிலமான பங்கப்பழனத்து உழும் உழவர்களின் வயல்களும், மறுபுறம் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமும் சூழ நிலைகொண்டுள்ள, நுணசையம்பதி வள்ளிசமேதரர் ஆலயம் அமைந்துள்ளது.
இன்று பக்தகோடிகளால் காவடிக்கந்தன் என சிறப்பாக அழைக்கப்படுகிறது. ஆகம விதிப்படி மஹோற்சவக் காலமானது அப்பதிக்கும் அவ்வூர்மக்களையும் காத்து அருள பரியும் காலமாகும்.
எம் காவடிக்கந்தன் தன அருகிலும், அயல் ஊர்களிலும் கடல் கடந்தும் வாழும் தம் அடியவர்களான பக்தர்களின் பாவங்களைப்போக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்.
இன்ற மஹோற்சபத்தின் 11வது நாளான தேர்த்திருவிழாவாகும்.தேர் ஏறி வரும் வேலவனின் அற்புதக்காட்சியினைக் காணாத கண்ணும் கண்ணோ!
இக்கொரோனாவின் அகல முடியா இச்சூழ்நிலையில் அவன் அடிபணிந்து அருள் பெறமுடியாத பக்தர்கோடிகளை உன் விந்தை புரியும் வேல்தனைக்கொண்டு அதன் தெய்வீக ஔியால் பரவசப்படுததும் ஐயா! காவடிக்கந்தனின் கலசத்தின் ஔியானது உன்அடி வந்து காணமுடியாது அவதியுறும் அடியவர்களை கலக்கமின்றி வாழவைக்கட்டும் .வேண்டிப்பின்னும் வேண்டுகின்றேன் விநாயகன் தம்பிவேலவனே! வினை தீர்த்து அருளுமையா!!
ஓம் முருகா கந்தா கடம்பா! வெற்றிவேல் முருகாவீர வேல் முருகா! மாயோன் மருகா! உன்னடி போற்றி உன் அடி சரணகாக்க காக்க வேலவா காக்க.காவடிகள் ஆடி வரும் அத்தோடு கூடியே உன் அலங்காரமான தேரும் பவணிவரும். பக்தர்கள் வேல்கள் பல கொண்டு தமது காயத்தில் குத்தியே கருணை காெண்டு ஆடிடுவார் பலவிதமாம் கந்தனுக்கு .அமைதியாய் இவ்ஆண்டில் ஆலயத்துள் வழாக்காணும் வேலா வேண்டிநிற்கிறோம் உன்அருளை!