Vimalachchanthiran Ranjini passed away on Monday, Febrary 14th, 2022 - அமரர் விமலச்சந்திரன் றஞ்சினி அவர்கள் 14/02/2022 திங்கட்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2022
மரண அறிவித்தல்
மண்ணில் - 1969.08.19 விண்ணில் - 2022.02.14
அமரர்விமலச்சந்திரன் றஞ்சினி (கமலம்)
மாங்குளம் கொலனியைப் பிறப்பிடமாகவும் மாதகல் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட விமலச்சந்திரன் றஞ்சினி (கமலம்) 14/02/2022 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற நடராசா செல்லம்மா அவர்களின் இளைய மகளும், காலஞ்சென்ற சபாரட்ணம் செல்லமுத்து அவர்களின் மருமகளும் ஆவார்.
இவர் விமலச்சந்திரனின் அன்பு மனைவியும், துசாந்தினி, ஐயந்தினி, சாந்தரூபி அவர்களின் பாசமிகு தாயாரும்,தேவராணி, பூலோகராசா, புவனேஸ்வரி, காலஞ்சென்ற தெய்வேந்திரராசா(காந்தன்), கடம்பராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சிவரூபன், சசிக்குமார் ஆகியோரின் மாமியாரும் சாருயன், சாயித்தன்,ஹர்சிதன், தேயஸ்வினி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் 15-02-2022 செவ்வாய்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு இறுதி கிரிகைகள் நடைபெற்று 01.00 மணியளவில் மாதகல் போதிமயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரிகைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.