Suppiramaniyam Mayakkirushnan passed away on Sunday, May 15th, 2022 - அமரர் சுப்பிரமணியம் மாயகிருஷ்ணன் (மாயவர்) அவர்கள் 15/05/2022 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2022
மரண அறிவித்தல்
மண்ணில் - 1947.01.15விண்ணில் - 2022.05.15
அமரர் சுப்பிரமணியம் மாயகிருஷ்ணன் (மாயவர்)
மாதகல் கிழக்கை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மாயகிருஷ்ணன் (மாயவர்) அவர்கள் 15.05.2022 இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் இராசம்மாவின் அவர்களின் மகனும் காலஞ்சென்ற சபாரட்ணம் செல்லமுத்து அவர்களின் மருமகனும் ஆவார். இவர் செல்வராணியின் அன்பு கணவரும், குமரேஸ்வரியின் பாசமிகு தந்தையும், விக்கினேஸ்வரனின் மாமனாரும் தனுஷன், பிரணா ஆகியோரின் பேரனாரும், காலஞ்சென்ற பாலச்சந்திரன், இந்திராணி, விமலச்சந்திரன், இராமச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை (16/05/2022) காலை 08.00 மணியளவில் இறுதிக் கிரிகைகள் நடைபெற்று 10 மணியளவில் மாதகல் போதிமயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரிகைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.