யா/மாதகல் சென். தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் கட்டட நிர்மானத்திற்கான வங்கிக்கணக்கிலக்கம் வெளியிடப்பட்டது. 04-01-2022
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2022
யா/மாதகல் சென். தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் கட்டட செயற்பாட்டுக் குழுவின் முயற்சியினால் இலங்கை வங்கியின் பண்டத்தரிப்புக் கிளையில் 'பாடசாலைக் கட்டட நிர்மாணம், யா/மாதகல் சென். தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலை' என்ற பெயரில் வங்கிக் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக் கணக்கின் வைப்புக்களை ஆரம்பிக்கும் பொருட்டு இன்று 04.01.2022(செவ்வாய்க்கிழமை) பி.ப 5.00 மணியளவில் பாடசாலை மட்டத்தில் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாதகல் பங்குத்தந்தை, பாடசாலையின் கட்டட செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் பழைய மாணவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் திரு.ரட்ணகுலம்(ரட்டி) அவர்கள் எமது கிராமத்திற்கு வந்திருந்த வேளை முதற்கட்டமாக ரூபா 5 இலட்சத்தை (500,000) பாடசாலை அதிபரிடம் வழங்கி நிதி சேகரிப்பை ஆரம்பித்து வைத்தார். இவரை பாடசாலை சமூகம் மற்றும் கட்டட செயற்குழு ஆகியவற்றுடன் இணைந்து மாதகல்.கொம் இணையத்தளமும் பாராட்டி வாழ்த்துகின்றது.