பண்டத்தரிப்பு பிரதேச ஆதார வைத்தியசாலை தரம் உயரத்தப்பட நடவடிக்கை எடுப்போம் - சிறீதரன் எம்.பி தெரிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2021
பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. சிவஞானம் சிறீதரன் அவர்கள் மாதகல் கிராம மக்களின் அழைப்பை ஏற்று இன்றைய தினம்(29.12.2021) எமது கிராமத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன் போது பண்டத்தரிப்பு பிரதேச ஆதார வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் விரிவாக ஆராய்ந்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், குறித்த வைத்தியசாலையை தரம் உயர்த்தினால் இப்பிரதேச மக்கள் வைத்திய சேவையைப் பெற தூர இடங்களுக்கு செல்வதை குறைக்கலாம் எனவும் இப்பிரதேச மக்கள் இவ் வைத்தியசாலையிலேயே சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இது தொடர்பாக உரிய தரப்பினருடன் பேசி நடவடிக்கைகளை எடுப்போம் என உறுதி அளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த விஜயத்தின் போது பிரதேச சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் மற்றும் கட்சி உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.