ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமெளலீஸ்வர சுவாமி தேவஸ்தானம் மார்கழி திருவாதிரை பெருவிழா 28.12.2022 அன்று ஆரம்பமாகவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2022
ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமெளலீஸ்வர சுவாமி தேவஸ்தானம்
மார்கழி திருவாதிரை பெருவிழா
28.12.2022 புதன்கிழமை முதல் 05.01.2023 வியாழக்கிழமை வரையிலும் தினமும் அதிகாலை 4.00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருவனந்தல் பூஜை, காலை 4.30 மணிக்கு அபிஷேகம். 5:30 மணிக்கு நித்திய பூஜை, காலை 6.00 மணிக்கு தித்சபையில் நடராஜ மூர்த்திக்கு அலங்கார பூஜை. திருவெம்பாவை ஆராதனை, தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்.
06.01.2023 வெள்ளிக்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி காலை 03.00 மணிமுதல் நடராஜா மூர்த்தி, சிவகாமி அம்பாள் மகா அபிஷேகம். 10.00 மணிக்கு திருவாபரண அலங்காரம், விஷேட ரகசிய பூஜை, மார்கழித் திருவாதிரை மஹா தரிசனம் பஞ்ச மூர்த்திகள் தரிசனம் இடம்பெற்று தொடர்ந்து ராஜமூர்த்தி ஞான ஆகாச சித்சபை பிரவேஸமும் நடைபெற்று திருவருட் பிரசாதம் வழங்கப்படும்.
இப்பெருவிழாவில் அடியவர்கள், குறிப்பாக கல்வி கற்கும் மாணவச் செல்வங்கள் கலந்து கல்வியிலும், வாழ்விலும் சிறப்படைய எம்பெருமானின் பூரண திருவருளைப் பெற்று இஷ்ட சித்திகள் அடைவீர்களாக.
குறிப்பு : 10 தினங்களும் அதிகாலையில் தவறாமல் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பான பரிசில்கள் வழங்கப்படும்.
மெய்யடியார்கள் மார்கழி திருவாதிரை பெருவிழாவில் கலந்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ பரிபூரண திருவருள் பெற்றுய்வீர்களாக.
ஆலய குரு : பிரம்மஸ்ரீ.மா.சிவப்பிரிய குருக்கள்
ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமெளலீஸ்வரர் தேவஸ்தானம்.