கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியத்தின் இருபெரும் தூண்களான அமரர் குணரத்தினம் கனகலிங்கம் மற்றும் முன்னை நாள் செயலாளர் சபா அருள் சுப்பிரமணியம் ஆகியோர்களின் திருவுருவப்படங்கள் ஸ்தாபித்தலும் நினைவேந்தல் நிகழ்வும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2022
கடந்த 29 ஆண்டுகளாக கனடாவில் இயங்கி வரும் மாதகல் கிராம மக்களின் தொண்டு நிறுவனமான கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியத்தின் இருபெரும் தூண்களாக அர்ப்பணிப்புடன் செய்யப்பட்டு இயற்கை எய்திய பேராளர்களான முன்னை நாள் தலைவர் அமரர் குணரத்தினம் கனகலிங்கம் மற்றும் முன்னை நாள் செயலாளர் சபா அருள் சுப்பிரமணியம் ஆகியோர்களின் திருவுருவப்படங்கள் மாதகல் நலன்புரிச் சங்கத்தில் ஸ்தாபித்தலும் நிறைவேற்ற நிகழ்வும் 05/11/2022 சனிக்கிழமை மாலை 03:30 மணிக்கு மாதகல் நலன்புரிச் சங்கத்தில் மாதகல் நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சிற்றம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக நிகழ்வின் சுடர்களை கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய செயலாளர் திரு. சரவணன், மாதகல் நலன்புரிச் சங்கத் தலைவர் திரு. சிற்றம்பலம், மாதகல் நலன்புரிச்சங்க பொருளாளர் திரு. பங்கிராஸ் அமரர் குணரத்தினம் கனகலிங்கம் அவர்களின் சகோதரி திருமதி சிவகுரு வசந்திராதேவி மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர் திரு சபாரத்தினம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து அமரத்துவமடைந்த இரு பேராளர்கள் நினைவாக இவர்களின் ஆன்மா சாந்திக்காக அமைதி வணக்கம் இடம்பெற்றது. அமரர் குணரத்தினம் கனகலிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான சுடரினை இவரின் சகோதரியும் அமரர் சபா அருள் சுப்பிரமணியம் அவர்களின் திருவுருவப் படத்திற்கான சுடரினை கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய செயலாளரும் ஏற்றி வைத்தனர். பேராளர்கள் அவர்கள் இருவரின் திருவுருவப்படத்திற்கு அமரர் குணரத்தினம் கனகலிங்கம் அவர்களின் சகோதரியின் துணைவர் திரு. சிவகுரு அவர்களும் மாதகல் நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சிற்றம்பலம் அவர்களும் மலர் மாலைகளை அணிவித்தனர்.
தொடர்ந்து சமூகமளித்த அனைவரும் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செய்தனர். நினைவுப் பேருரைகளை நிகழ்வின் தலைவர் திரு. சிற்றம்பலம், மாதகல் நலன்புரிச்சங்க உறுப்பினர் திருமதி கோமதி மற்றும் கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய செயலாளர் திரு சரவணன் ஆகியோர் நிகழ்த்தினர்.
நன்றியுரையினை மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் திரு. மா. ஜெறாட் நிகழ்த்தினார். நன்றியுரைத் தொடர்ந்து பேராளர்களின் திருவுருவப் படங்கள் ஸ்தாபிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.