11/01/2022 அன்று மாதகல் கடற்பரப்பில் எட்வேட் மரியசீலன்(திலீபன்) என்ற மீனவர் கடற்படையின் படகால் மோதுண்டு கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் அவரின் மரணத்திற்கு நீதி வேண்டியும் அவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கோரியும் தொடர்ந்து வரும் நாட்களில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதி கோரிப் போராடும் மக்களை அச்சுறுத்தும் கடற்படையின் அடாவடிகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கவனயீர்ப்பு போராட்டம் 13/01/2022 அன்று நடைபெற்றது.
இதில் பொது மக்கள், பொது அமைப்புகள், மீனவ சங்கங்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து காெண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.