5வது தடவையாக பசுமையில் மாதகல் மரநடுகைத் திட்டத்தை நோக்காக கொண்டு செயற்படுத்தப்படும் போட்டிகள் 13/11/2022 அன்று நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2022
5வது தடவையாக பசுமையில் மாதகல் மரநடுகைத் திட்டத்தை நோக்காக கொண்டு செயற்படுத்தப்படும் போட்டிகள் 13/11/2022 அன்று நடைபெற்றன
05வது வருடார்ந்த பசுமையில் மாதககல் மரநடுகைத் திட்ட நிகழ்வை நோக்காகக் கொண்டு 13/11/2022ஆம் திகதி ஞாயிறு காலை 10:30 மணிக்கு யா/ மாதகல் சென் தோமஸ் றோ. க. பெண்கள் பாடசாலையிலும்,
யா/ மாதகல் ஜோசப் மகா வித்தியாலயத்திலும் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க நிதி அனுசரணையில் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்பட்டது. இதில் முன்பள்ளி மாணவர்கள் வயது ரீதியாகவும் பாடசாலை மாணவர்கள் தரம் ரீதியாகவும் நடாத்தப்பட்ட போட்டிகளில் 171 மாணவர்கள் பங்கு பற்றியதுடன் போட்டிக்கான மேற்பார்வையாளர்களாக மாதகல் கிராம மட்ட பாடசாலை ஆசிரியர்களுடன் நலன்புரிச் சங்க பிரதிநிதிகளும் மேற்கொண்டதுடன் இதன் மதிப்பீடுகள் மாலைகள் கிராமம் தழுவிய அயற்பாடசாலை தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குழாமினால் மதிப்பீடுகள் செய்யப்பட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு 20/11/2022 ஆம் திகதி ஞாயிறு காலை 09:00 மணிக்கு மாதகல் நலன்புரிச்சங்கத்தில் நடைபெறும் பசுமையில் மாதகல் நிகழ்வின்போது பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.
மாதகல் கிராமத்தை பசுமை எழில்மிகு கிராமமாக்கும் தூரநோக்கு செயற்பாட்டு திட்டமான பசுமையில் மாதகல் செயற்பாட்டு திட்டத்தை நோக்காக கொண்டு நடாத்திய போட்டிகளின் ஊடாக மாணவர்களின் ஆழ்மனங்களில் பதிவுகளை ஏற்படுத்தி நாம் வாழும் சூழலின் மகத்துவத்தை உணர்ந்து மாதகல் கிராமத்தை பசுமையாக்கும் இவர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை