"பசுமையில் மாதகல்" இலவச மரநடுகைத் திட்ட விழா 20.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2022
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையில் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் மாதகல் கிராமத்தில் வருடந்தோறும் நடாத்தப்படும் "பசுமையில் மாதகல்" இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 05வது தடவையாக இவ்வாண்டு 20.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.00 மணிக்கு மாதகல் நலன்புரிச் சங்க வளாகத்தில் நலன்புரி சங்கத் தலைவர் திரு.வி.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரு.வே.அருந்தவராசா (சிறப்பு விருந்தினர் - வலி.தென்மேற்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர்), திரு.ஜேம்ஸ் பொப்ளர் (J/150 கிராம சேவை உத்தியோகத்தர்), திரு.விக்னபவன் (J/151 கிராம சேவை உத்தியோகத்தர்), திரு.சுஜீபன் (J/152 கிராம சேவை உத்தியோகத்தர்), அருள்ஞானாந்தன் (மாதகல் கல்வி அபிவிருத்தச் சங்க தலைவர்), திரு.மரியநேசன் (வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்), மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், பாெது அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
"பசுமையில் மாதகல்" செயற்திட்டத்தை மையமாக வைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கிடையிலான கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடாத்தப்பட்டு அவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் 2021ல் பாடசாலை, முன்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளின் தற்போதைய நிலவர மதிப்பீடுகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற பாடசாலைகள், முன்பள்ளிகளுக்கு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் மாதகல் நலன்புரிச் சங்க வளாகத்தில் விருந்தினர்களால் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டதுடன், பதிவு செய்த 318 குடும்பங்களுக்கும் பொது அமைப்புகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.