Nadarasa Poolokarasa passed away on Monday, Febrary 21th, 2022 - அமரர் நடராசா பூலோகராசா அவர்கள் 21/02/2022 திங்கட்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2022
மரண அறிவித்தல்
மண்ணில் - 1961.10.16 விண்ணில் - 2022.02.21
அமரர்நடராசா பூலோகராசா
முல்லைத்தீவு மாங்குளம் கொலனியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நடராசா பூலோகராசா 21/02/2022 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற நடராசா செல்லம்மா அவர்களின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை திருமணி அவர்களின் மருமகனும் ஆவார்.
இவர் தேவராணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற றஞ்சினி (கமலம்) , தெய்வேந்திரராசா (காந்தன்), கடம்பராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பேரின்பநாயகியின் அன்புக் கணவரும், மயூரன், சோபிகா,கஸ்தூரி அவர்களின் பாசமிகு தந்தையும், மயூரதன் (மருமகன்) அவர்களின் மாமனாரும், ஜெயபாலகிருஸ்ணன், நகேந்திரராசா, விமலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மதுரிகாவின் பேரனும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் 22/02/2022 செவ்வாய்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு இறுதிகிரிகைகள் நடைபெற்று 10.00 மணியளவில் மாங்குளம் பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரிகைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.