பண்டத்தரிப்பு கிராம உப அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று(04.05.2022) நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2022
தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சின் முன்னாள் கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிதி மற்றும் சபை ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு கிராம அலுவலகம்
கௌரவ அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் (தவிசாளர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை) அவர்களின் தலைமையில் திரு. வினாயகமூர்த்தி சுப்பிரமணியம் (தலைவர் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்), திரு. விசுவநாதர் சுப்பிரமணியம் (தலைவர் பண்டத்தரிப்பு பரிஷ் ப.நோ.கூ சங்கம்), திருமதி. சுலோச்சனா முருகேசன் (பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம்), திருமதி. யசோதா உதயகுமார் (பிரதேச செயலர், சண்டிலிப்பாய்), திரு. நாகலிங்கம் வேதநாயகன் (முன்னாள் மாவட்ட செயலாளர் யாழ்ப்பாணம்) ஆகியோரின் பங்குபற்றுலுடன் திரு மாவை சோ.சேனாதிராசா (தலைவர், இலங்கைத் தமிழரசுக் கட்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களால் 2022.05.04 ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.