மாதகல் அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வர சுவாமி தேவஸ்தானம் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டமும் மாசி மகா மஹோற்சவமும் - 2022
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2022
மாதகல் - நுணசை - கூடல்விளாத்தி
அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வர சுவாமி தேவஸ்தானம்
புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம்
புதிய சித்திரத்தேரினது பிரதிஷ்டை வெள்ளோட்டம் 06.02.2022 காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊர் சேர்ந்து வடம் பிடித்து உலகம் உய்ய பிரார்த்தித்து எம்பெருமானின் பரிபூரண திருவருளை பெற்றுய்வீர்களாக.
மாதகல் - நுணசை - கூடல்விளாத்தி
அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வர சுவாமி தேவஸ்தானம்
மாசி மகா மஹோற்சவம் - 2022
சிவபூமி, தெக்ஷிண கைலாயம், இரத்தின மண்டலம் என்றெல்லாம் சிறப்பாக போற்றப்படும் இலங்கைத் திருநாட்டிலே சைவமும், தமிழும், தமிழர் பண்பாடும் தளைத்தோங்கி விளங்கும் யாழ்.மாவட்டத்திலே பக்தியிலும், கலையிலும் தனிச்சிறப்பு பெற்றதுமாகியே மாதகல் எனும் விவசாய க்ஷோத்திரத்தீலே இயற்கை வளங்களுடன் கூடிய கூடல் விளாத்தியின் கண்ணே எழில் அழகுடன் எழுந்தருளி தம்மைத் தொழுகின்ற பக்தர்களுடைய இஷ்ட சித்திகளை நிறைவேற்றி பேரருளை வாரி வழங்கும் வள்ளலாய் விளங்கும் ஸ்ரீமத் சாந்தநாயகி சமேத சந்திர மௌலீஸ்வர பெருமானுக்கு ஆகமோக்த ரீதியாக பல தத்துவார்த்தங்களை உள்ளடக்கியதாகிய மகா உன்னதமான மஹோற்சவமானது பேரீதாடன பூர்வமாக தை 26ம் நாள் (08.02.2022) செவ்வாய்க்கிழமை பகல் 11.01 மணியளவில் த்வஜாரோஹணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது தினங்கள் விஷேட உற்சவங்கள் நடைபெற்று 10ம் நாள் மாசி 05ம் நாள் (17.02.2022) வியாழக்கிழமை மாசிமகம் எனப்படும் உன்னத நன்நாளில் சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெற்று மாலை த்வஜஅவரோஹணத்துடன்(கொடி இறக்கம்) மகா மஹோற்சவம் இனிதே நிறைவேற குருவருளும் திருவருளும் கைகூடியுள்ளது. பல சிறப்புக்கள் வாய்ந்த மாசி மக மஹோற்சவ தினங்களில் அடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாய் வருகை தந்து யாக வழிபாடுகளிலும் கலந்து கொண்டு எம்பெருமானின் பரிபூரண திருவருள் பெற்றுய்வீர்களாக.
எம்பெருமானது ரதோத்சவம் பொது உபயமாக நடைபெற இருப்பதால் அடியார்கள் தங்களால் இயன்ற பொருளுதவி, நிதியுதவி வழங்கி எம்பெருமானது திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.