மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கான காணிக் கொள்வனவிற்காக பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், மாதகல் நலன்புரிச் சங்கத்தினர் ஊடாக பணம் வழங்கி வைப்பு.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2022
மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கான காணிக் கொள்வனவிற்காக மாதகல் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், மாதகல் நலன்புரிச் சங்கத்தினர் ஊடாக ரூபா மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் வழங்கி வைத்துள்ளனர்.
இவ்நிதி உதவிக்காக கிராம அபிவிருத்தி சங்கம் நன்றிகளை தெரிவித்து நிற்கின்றனர்.
மேலும் இக்காணிக் கொள்வனவிற்கு நிதி தேவைப்படுவதால் நலன் விரும்பிகளிடமிருந்து நிதி பங்களிப்பினை மாதகல் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் வேண்டி நிற்கின்றனர்.