5ஆவது வருடமாக பசுமையில் மாதகல் நிகழ்ச்சித் திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2022
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில் மாதகல் நலன்ரிச்சங்கத்தால் மாதகல் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு 5 ஆவது ஆண்டாக மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது.
மரக்கன்றுகள் தேவைப்படுவோர் முற்பதிவுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முற்பதிவுகளின் அடிப்படையிலேயே மரக்கன்றுகள் வழங்கப்படும்.
பதிவு செய்யும் இடம் : மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகம்
(மாதகல் கிழக்கு கிராம அலுவலர் செயலகம் அருகாமை)
பதிவு செய்யும் திகதி : 04, 05, 06 - 11 - 2022 (03 நாட்கள்)
நேரம் : தினமும் காலை 09 மணி - காலை 11 மணி வரை
மதியம் 02.30 மணி - மாலை 05.00 மணி வரை
முக்கிய குறிப்பு பதிவுகளை மேற்கொள்ள வருபவர்கள் தமது குடும்ப அட்டை மற்றும் ஆள் அடையாள அட்டையை எடுத்து வரவும்.
பதிவுகளின் பின் தங்களுக்கு வழங்கப்படும் பதிவுத்துண்டையும் ஆள் அடையாள அட்டையையும் மரக் கன்றுகளை விநியோகிக்கும் போது எடுத்து வரவும்.