கனடா மாதகல் நலன்புரி சங்கத்தின் "நம் உறவுகளை நாமே தாங்குவோம்" என்னும் நிகழ்வும் மார்கழி ஒன்றுகூடலும்.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2009
கனடா மாதகல் நலன்புரி சங்கத்தின் "நம் உறவுகளை நாமே தாங்குவோம்" என்னும் நிகழ்வும் மார்கழி ஒன்றுகூடலும் கடந்த ஆண்டு மார்கழி 20ஆம் நாள் மாலை சுவெல்ஸ் நீல்சன் சந்திக்கருகில் அமைந்துள்ள நேற்றிவிற்றி தேவாலயத்தில் நடைபெற்றது.
அன்றைய நிகழ்வின்போது மாதகலுக்கு இடம்பெயர்ந்து வந்த உறவுகளுக்கு அனுப்பிவைத்த ஒன்பதாயிரம் டொலர் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது என்ற விபரம் காட்சிப்படுத்தப்பட்டது.
கனடாவில் ஊடகத்துறையில் நன்கு அறியப்பட்டவரும் சமூக சேவகரும் மாதகலைச் சார்ந்தவருமான திரு.பிரெட் பாலசிங்கம் அவர்ககள் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார். திரு. திருமதி பாலசிங்கம் இணையருக்குச் செயலவை உறுப்பினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் தெரிவித்தனர்.
அத்துடன் அன்றையதினம் ஸ்காபரோ, மொன்றியால்வாழ் மாதகல் கலைஞர்களின் முத்தமிழ்க் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.