11/01/2022 அன்று மாதகல் கடற்பரப்பில் எட்வேட் மரியசீலன்(திலீபன்) என்ற மீனவர் கடற்படையின் படகால் மோதுண்டு கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் அவரின் மரணத்திற்கு நீதி வேண்டியும் அவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கோரியும் தொடர்ந்து வரும் நாட்களில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதி கோரிப் போராடும் மக்களை அச்சுறுத்தும் கடற்படையின் அடாவடிகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பொது மக்கள், பொது அமைப்புகள், மீனவ சங்கங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் 13/01/2022(வியாழக்கிழமை) நாளை மதியம் 12.00 மணியளவில் உயிரிழந்த மீனவரின் இல்லத்திற்கு அருகாமையில் ஓரணியில் அணிதிரண்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தவிசாளர்
வலி.தென்மேற்கு பிரதேச சபை
மாதகல் குசுமந்துறை பகுதியில் இடம்பெற்ற கடற்படை அராஜகத்தையும்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால்
படுகொலை செய்யப்பட்ட மீனவர் திலீபனிற்கு நீதி கோரி
மாதகல் மீனவர் சங்கத்தினால் ஏற்பாட்டில் கிராம மட்ட அமைப்புக்களை உள்ளடக்கி
நாளைய தினம் (13.01.2022) நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி பூரண ஆதரவு
மாதகல் வட்டார உறுப்பினர் திருமதி V. சிவனேஸ்வரி அனைவருக்கும்