Mariyaampillai Makirettamma passed away on Wednesday, August 24th, 2022 - அமரர் மரியாம்பிள்ளை மாகிறேற்றம்மா அவர்கள் 24/08/2022 புதன்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2022
மரண அறிவித்தல்
மண்ணில் - 1942.11.16 விண்ணில் - 2022.08.24
அமரர்மரியாம்பிள்ளை மாகிறேற்றம்மா
சில்லாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை மாகிறேற்றம்மா அவர்கள் 24.08.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா ஆகியோரின் அன்புப் புதல்வியும் காலஞ்சென்றவர்களான கபிரியேற்பிள்ளை, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற மரியாம்பிள்ளையின் பாசமிகு மனைவியும் யசிந்தா ஸ்ரனிஸ்லஸ் (ஜேர்மனி). அஞ்சலினா (றஜிதா) ஆகியோரின் பாசமிகு தாயரும் றமிலா (ஜேர்மனி), அன்ரனி தேவதாஸ் (யோகராசா - மாதகல்) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26.08.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சில்லாலை புனித யாகப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.