மக்கள் வாழ உதவும் நிறுவகத்தின் 1ம் வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் கலை நிகழ்வும் அதிஷ்ட இலாபச்சீட்டிழுப்பும் இன்று(24.04.2022) நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2022
மக்கள் வாழ உதவும் நிறுவகத்தின் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குமான உணவு வழங்கும் செயற்பாட்டின் 1ம் வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் கலை நிகழ்வும் அதிஷ்ட இலாபச்சீட்டிழுப்பும் நேற்று(24.04.2022) மாதகல் இளைஞர் மன்ற கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சிவ பிரம்ம ஸ்ரீ ந. கஜநேசக் குருக்களும் மாதகல் பங்குத்தந்தை அருட்பணி அன்ரனி பாலா அடிகளாரும் ஆசியுரையை வழங்கியிருந்தனர். இந்நிகழ்வுக்கு பாடசாலை அதிபர்கள், கிராம சேவையாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலை மாணவர்களால் கலை நிகழ்வுகளும் அவர்களுக்கான கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன. சீட்டிழுப்பு நிகழ்வும் இடம்பெற்று அதில் வென்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. பின்னர் இசை நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வை மாதகல் வாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்கமைப்பு செய்திருந்தனர்.