காணி சுவீகரிப்பு மக்களால் முறியடிப்பு - மாதகலில் பரபரப்பு 17-11-2021
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2021
காணி சுவீகரிப்பு மக்களால் முறியடிப்பு மாதகலில் பெரும் பரபரப்பு
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு பிரசன்னமாகியுள்ள நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காணப்படும் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றினை அளவீடு செய்வதற்கு முயற்சிமேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.
குறித்த காணியினை வழங்குவதற்கு காணி உரிமையாளர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்து 2014 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை நில அளவைத்திணைக்களத்தினர் கை வசம் வைத்திருப்பதாக தெரியவருகிறது.
இருந்தபோதிலும் காணி உரிமையாளர் அங்கு வந்தால் மட்டுமே காணி அளவீடு செய்ய அனுமதிக்கப்படும் என்று மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
ஏற்கனவே குறித்த பகுதியில் கடற்படையினர் அங்கு பிரசன்னமாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.