Mrs. Kanakambal Markandu passed away on Thursday, November 29th, 2018 - திருமதி மார்க்கண்டு கனகாம்பாள் (கமலம்) 29/11/2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2018
திருமதி மார்க்கண்டு கனகாம்பாள் (கமலம்)
பிறந்ததிகதி 1933-11-18 - இறந்ததிகதி 2018-11-29
மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கனகாம்பாள் (கமலம்) அவர்கள் 29/11/2018 வியாழக்கிழமை அன்று இயற்கைமரணம் எய்தினார்.
இவர் காலம்சென்ற மார்கண்டுவின் அன்பு மனைவியும்,
காலம்சென்ற இராசரட்ணம் சிதம்பரவள்ளி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
சிவனேசன், விஐயலட்சுமி, சறோஜினிதேவி, காலம்சென்ற சிறிதரன் மற்றும் குகனேசன் ஆகியோரின் அன்புதாயாரும் ஆவார்.
இவர் ஜெயராணி, இராஐதுரை, காலம்சென்ற வேலும்மயிலும், சத்தியபாமா மற்றும் தேவகி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலம்சென்ற தயா/சுகி, கலா/கிசாந்தன், ரூபன்/பவித்திரா, நந்தன், சுமனன்/சிந்துயா, ரமணன்/கரோலினி, ரிசா/பிருந்தாவன், சத்தியா/ரமணன், வித்தியா/கஜேந்திரன், கஜேந்திரன், சிறிதேவி/சஜீவ், ரங்கன், ரங்கா, அபிராமி, கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவர் அபி, கர்ஜிகா, சஞ்ஜேய், தனுசியா, ஹர்னிகா, அக்க்ஷதன், அபராஜிதன், மகீசன், அக்ஸித், அத்விகா, சங்கீர்த்தன், தருணிகா அவர்களின் அன்புப்பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 2018-12-02 ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் 5 மணி இருந்து 9 மணி வரை Chapel Ridge 8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1 பார்வைக்கு வைக்கப்பட்டு,
திங்கள்கிழமை 2018-12-03 அதிகாலை 8 மணி இருந்து 9:30 மணி வரை அதே இடத்தில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பின் 12 மணிக்கு தகனக்கிரிகைக்காக Highland Hills crematorium 12492 woodbine avenue, Gormley க்கு எடுத்துச்செல்லப்படும்.