மாதகலில் நற் குண முன்னேற்ற அமைப்பின் 7வது கிராம வலுவூட்டல் திட்டமாக 2017 ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2016
நற் குண முன்னேற்ற அமைப்பானது 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஆயிரக்கனக்கான மக்களின் வாழ்க்கையில் பேரழிவை ஏற்ப்படுத்திய சுனாமியினைத் தொடர்ந்து ஒரு முழுமையான கிராமிய சமூகத்தை அபிவிருத்தி செய்வதற்க்காக தனது வேலைத் திட்டங்களைவ விரிவுபடுத்தி செயற்படுகின்றது. அதாவது இவ் நற் குண முன்னேற்ற அமைப்பானது இன்று வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் உள்ள 200கும் அதிகமான கிராமங்களிற்க்கும் 35000கும் அதிகமான பயனாளிகளுக்கும் இலவசமாக தனது சேவையை 30 வலுவூட்டும் செயற்ப்பாட்டின் ஊடாக பரவலாக வழங்குகின்றது. குறிப்பாக கலை மற்றும் பல்லூடகம், சிறுவர்கள் நிறுவனம் மற்றும் அதிகாரமளித்தல் சுற்றுச்சூழல் வீடமைப்பு பற்சிகிச்சை மருத்துவம் மற்றும் உளசமூக ஆதரவு கல்வி உதவித்தொகை விளையாடடு அபிவிருத்தி மற்றும் மேலாண்மை நிலையான வருமானத் தலைமுறை கிராம வலுவூட்டல் திட்டம் கிராம நலத்துiறு மற்றும் அபிவிருத்தி மேலும் தொண்டர் மேலாண்மை போன்றவற்றின் ஊடாக சேவையை வழங்குகின்றது.
மேலும் இவ் நற் குண முன்னேற்ற அமைப்பானது கிராம வலுவூட்டல் திட்டத்தின் ஊடாக மிக முக்கியமான கல்வி மற்றும் பயிற்சிகளை கிராமங்களிற்க்கு வழங்கி வருகின்றார்கள். இத்திட்டமானது வசதிகளற்ற சமூகத்திற்க்கு வலுவூட்டும் முயற்சியாகும் இதனால் அவர்கள் தங்கள் வாழ்வில் திறமையானவர்களாவதற்க்கு சம வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த கிராம வலுவூட்டல் சிந்தனையானது வறுமையில் வாடுகின்ற கிராம மக்கள் பயிற்சித்திறன்களை கற்றுக்கொள்வதற்க்கு ஓர் கிராமத்தின் நரம்பு போல் இயங்குகின்றது. இதனால் அவ் கிராம மக்கள் தங்களுடைய திறன் மற்றும் கல்விச் செயற்ப்பாடுகளை தகவல் தொழில்நுட்ப்பம் சிறுவர் கல்விமுறை பெண்களுக்கான வலுவூட்டல் வாழ்வின் மதிப்பு மற்றும் வாழ்க்கைத் திறன் வளர்ச்சி போன்றவற்றில் விருத்தி செய்துகொள்ள முடியும்.
இவ்வாறான கிராம வலுவூட்டல் திட்டமானது தற்ப்போது மாதகலில் நற் குண முன்னேற்ற அமைப்பின் 7வது கிராம வலுவூட்டல் திட்டமாக 2017 ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இங்கு வழங்கப்படவுள்ள சேவைகளாக தகவல் தொழில்நுட்ப்பம், ஆங்கிலம், சிறுவர் கல்விமுறை (தரம் 1 – 11 வரை), நூலகம், பெண்களுக்கான வலுவூட்டல் பயிற்சிகள், சிறுவர் நற்க்குண கழகம் சமூக உதவி போன்றவை குறிப்பிடப்படுகின்றது.