பசுமையில் மாதகல் இலவச மரக்கன்றுகள் வழங்கல் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மாணவர்களுக்கு போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2022
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில் மாதகல் நலன்புரிச் சங்கத்தினூடாக மாதகல் கிராமத்தை ஓர் எழில்மிகு பசுமை நிறைந்த கிராமமாக்கும் தூர நோக்கோடு பசுமையில் மாதகல் இலவச மரக்கன்றுகள் வழங்கல் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக 2017 ஆம் ஆண்டிலிருந்து 2022 நடப்பாண்டு வரையில் 05 ஆவது தடவையாக முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்ச்சி திட்டத்தை முன்னிட்டு முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு போட்டிகள் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய பின்வரும் போட்டிகள் மாணவர்களுக்கு நடாத்தப்பட உள்ளது.
முன்பள்ளி மாணவர்கள், தரம் 1, 2, 3 ஓவியப் போட்டி தலைப்பு
"மரங்களை நடுவோம் மாதகல் கிராமத்தை பசுமை மிகு கிராமாக்குவோம்"
தரம் 4, 5 கட்டுரைப் போட்டி
"நாம் வாழும் சூழலை சிறப்பானதாக்குவோம்"
தரம் 6, 7, 8 கட்டுரைப் போட்டி
"பசுமையில் மாதகல் மர நடுகைத் திட்டமும் எதிர்கால நோக்கும்"
தரம் 9, 10, 11, கா.பொ.த உ/த கட்டுரைப் போட்டி
"பசுமையில் மாதகல் மர நடுகைத் திட்டமும் சுற்றுப்புற சூழலின் எழிலும்"
குறிப்பு :
தரம் 4, 5 மாணவர்கள் 125 சொற்களுக்கு குறையாமல் 30 நிமிடங்களில் கட்டுரை எழுதப்படல் வேண்டும்.
தரம் 6, 7, 8 மாணவர்கள் 200 சொற்களுக்கு குறையாமல் 30 நிமிடங்களில் கட்டுரை எழுதப்படல் வேண்டும்.
தரம் 9, 10, 11 மாணவர்கள் 250 சொற்களுக்கு குறையாமல் 45 நிமிடங்களில் கட்டுரை எழுதப்படல் வேண்டும்.
ஓவியப் போட்டியில் கலந்து கொள்ளும் முன்பள்ளி மாணவர்கள் (வயது 4, 5) மற்றும் 1, 2, 3 ஆண்டு மாணவர்கள் குறித்த தலைப்பின் எண்ணக்கருவை வெளிக்கொணரும் வகையில் முன்கூட்டியே ஆயத்தம் செய்து போட்டி நடைபெறும் இடத்தில் ஓவியத்தை 30 நிமிடங்களில் வரைய வேண்டும்.
போட்டிகளில் கலந்து கொள்வோர் போட்டிக்கு தேவையானவற்றை எடுத்து வருதல் வேண்டும். ஓவியப்போட்டில் கலந்து கொள்வோருக்கு ஓவியம் வரையும் தாள் மட்டும் வழங்கப்படும்.
மாதகல் கிராமத்தை வதிவிடமாகக் கொண்டு வெளிப்பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 9, 10, 11 மற்றும் க.பொ.த உ/த மாணவர்களும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டிகள் 13.11.2022 ஞாயிறு காலை 10.30 மணிக்கு முன்பள்ளி மாணவர்கள் மற்றும் தரம் 1, 2, 3, 4, 5 மாணவர்களுக்கு யா/ மாதகல் சென் தாமஸ் றோ.க பெண்கள் பாடசாலையிலும் தரம் 6, 7, 8, 9, 10, 11 மற்றும் கா.பொ.த உ/த மாணவர்களுக்கு யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் நடைபெறும். போட்டியாளர்கள் உரிய நேரத்துக்கு சமூகமளித்தல் வேண்டும்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெறும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் தமது பெயர், போட்டியின் வகை, கல்வி கற்கும் தரம் / வயது ஆகியவற்றை தெரிவித்து தான் கல்வி கற்கும் பாடசாலை / முன்பள்ளி அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளால் உறுதிப்படுத்தி 10.11.2022 ஆம் திகதிக்கு முன் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.