மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல பெருவிழாவை முன்னிட்டு சிரமதானப் பணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2022
மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல பெருவிழாவை முன்னிட்டும் இலங்கையின் சுதந்திர தினத்தினை முன்னிட்டும் மாதகல் கிழக்கு J/150 கிராம சேவையாளரின் ஒழுங்குபடுத்தலில் மாதகல் கரையோரப் பகுதி மற்றும் புனித லூர்து அன்னை திருத்தல சுற்றாடல் என்பன இன்று (01/02/2022) சிரமதானம் செய்யப்பட்டது.
இதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாதகல் J/150 கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கடற்படையினர், இளவாலை பொலிஸ் பிரிவினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.