மாதகல் அரசடி அருள்மிகு ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் 2022
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2022
மாதகல் - அரசடி
அருள்மிகு ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் தேவஸ்தானம்
மகோற்சவ விஞ்ஞாபனம் 2022
திருக்கோவில் பல செல்லம் விநாயகர் அடியார்களே!
இப்பூவுலகில் சிறப்புமிகு ஆலயங்களை தன்னகத்தே கொண்டு சீரும், சிறப்பும் பொலித்தோங்கும் சுந்தரத் திருநாடாம் ஈழமணித் திருநாட்டிலே பாவலரும், பண்புறு சிந்தையரும், ஈசன் பாதம் தொழுதேத்தும் அடியார்கள் நிறைந்திருக்கும் யாழ்ப்பாணத் திருநகரிலே திருவும், கல்வியும், சிவசிந்தனையும், பண்பும் மேலோங்கி விளங்கும் மாதகல் கிராமத்திலே, அரசடி என்னும் திவ்விய பதியில் வீற்றிருக்கும் சித்தி விநாயகப் பெருமானுக்கு சுபகிருது வருடம் வைகாசி மாதம் 15ம் நாள் (29.05.2022) ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை நட்சத்திரமும், சதுர்த்தசி திதியும் கூடிய சுபவேளையில் நண்பகல் 11.00 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு துவஜாரோகணம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து 16 தினங்கள் மஹோற்சவம் நடைபெறும்.
மஹோற்சவ கால நிகழ்வுகள்
28.05.2022 சனிக்கிழமை - மாலை 7.00 மணிக்கு மஹோற்சவ பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகும்.
29.05.2022 ஞாயிற்றுக்கிழமை - நண்பகல் 11.00 மணியளவில் துவஜாரோகணம் (கொடியேற்றம்).
11.06.2022 சனிக்கிழமை - மாலை 7.00 மணிக்கு சப்பறத்திருவிழா.
12.06.2022 ஞாயிற்றுக்கிழமை - நண்பகல் 10.00 மணியளவில் விநாயகப் பெருமான் தேரில் ஆரோகணிப்பார்.
13.06.2022 திங்கட்கிழமை - காலை 7.00 மணிக்கு சமுத்திர தீர்த்தம். மாலை 7 மணிக்கு துவஜா அவரோகனம் (கொடியிறக்கம்) இடம்பெறும்.
மஹோற்சவ குரு
சிவஸ்ரீ.இ.உலகேஸ்வரக் குருக்கள் (மாதகல்)
குறிப்பு : மஹோற்சவ காலங்களில் தினமும் விநாயகப் பெருமானுக்கு பஞ்சமுக அர்ச்சனை நடைபெறும். அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலயத்திற்கு வருகை தரவும்.
காலை திருவிழா 8.30 மணிக்கு ஆரம்பமாகும். மாலை திருவிழா 6.00 மணிக்கு ஆரம்பமாகும். திருவிழா காலங்களில் மகேஸ்வர பூசை (அன்னதானம்) இடம்பெறும்.
இங்ஙனம்,
ஆலய பிரதமகுரு,
ஆலய தர்மகர்த்தா திரு.தி திருஞானசெல்வன்