யாழ் மாதகல் நுணசை வித்தியாலயம் இடம்பெயர்ந்து 20 வருடங்களின் பின்பு 02.01.2013 இன்று மீண்டும் தனது சொந்த கட்டடத்தில் இயங்க தொடங்கியுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி பற்றியும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும் பழைய மாணவர்களும் பெற்றோரும் இணைந்து ஓர் ஒன்றுகூடல் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதால் பழைய மாணவர்களும் தற்போது பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோரும் 05.01.2013 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.