Mrs. Rathinam Valliammai passed away on Sunday, June 2nd, 2013 - திருமதி. இரத்தினம் வள்ளியம்மை அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (02/06/2013) அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2013
மாதகலை பிறப்பிடமாகவும் வதிவிடமாவும் கொண்ட இரத்தினம் வள்ளியம்மை அவர்கள் 02-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
திருமதி இரத்தினம் வள்ளியம்மை
பிறப்பு: 13-05-1936 இறப்பு: 02-06-2013
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் மாதகல் கிழக்கு
Related News:
யாழ்ப்பாணம் மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இரத்தினம் வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிப பெண்மணியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பிறவியிலேயே கண் பார்வையற்ற இவர், இன்று அதிகாலை கிணற்றடிக்குச் செல்லும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.வீட்டில் உள்ளவர்கள் காலை 6.30 மணியளவில் இவரைத் தேடிப் பார்த்த போது இவர் கிணற்றுக்குள் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்தனர். மரண விசாரணையை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.