Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Mathagal Map
  Useful Links
  Advertisements
  Site Map
  Contact us
  Railway Stations
  Hindu Kovils in SL
  உதவும் கரங்கள்

திருகோணமலை லக்ஷ்மி நாராயணர் ஆலயம்

திருகோணமலை என்றவுடன் பலருக்கு ஞாபகம் வருவது இயங்கை அழகும் கடலால் சூழப்பட்ட அந்த மலைக்குன்றில் விசித்திரமாய் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் தான். தற்காலத்தில் திருக்கோணமலைக்கு வந்து சென்றவர்களுக்கு திருக்கோணேஸ்வரத்துடன் மற்றுமொரு பிரமாண்டமான ஆலயம் மனக்கண்களை ஆக்கிரமித்து நிற்கும். தெட்சணயைலாயம் என போற்றப்படும் திருகோணமலையின் அந்த கைலாயத்தின் தன்மையை மேலும் இது உறுபடுத்தியுள்ளது.

“கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே“ என ஞானசம்பந்தப்பெருமான் பாடியருளிய திருத்தலத்திற்கு மிக அண்மையில் இந்த ஆலயமும் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது மட்டுமன்றி இன்றைய காலகட்டத்தில் அதிகளவிலான பக்தர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் இனபேதமில்லாமல் கவர்ந்திழுத்துவரும் ஆலயமாக ஸ்ரீ அருள்மிகு லக்ஷ்மிநாராயணர் ஆலயம் திகழ்கின்றது. அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாளுக்கு அடுத்தாற்போல் இது திகழ்வது முக்கியமான விடயம்.

வெளியில் இருந்து வருபவர்கள் திருகோணமலை நகரத்தின் வாயிலை அடைந்தவுடன் வரும் மிகிந்தபுர சந்தியில் வடக்காக திரும்பினால் நிலாவெளி பிரதான பாதை உள்ளது. அந்தப்பாதையில் இருந்து சுமார் 6 மைல் தொலைவில் அதே பாதையில் சென்றால் சாம்பல்தீவு பழம் பெரும் கிராம சந்தியை கடக்கின்றபோதே ஆலயத்தின் அந்த பிரமாண்டத்தோற்றம் மனதினில் ஈர்பை ஏற்படுத்த தொடங்கிவிடும். பாரிய ஒரு நிலப்பரப்பில் நடுவே அமைந்துள்ள ஆலயத்தின் மிகப்பெரியளவில்லான வெளிவீதி புலப்படும். அவ்வீதியில் மிகப்பெரிய மணிக்கூட்டுக்கோபுரம் மற்றும் கொடி தம்பம் என்பன வித்தியாசமான வகையில் காட்சி தரும். இது வைஷ்ணவ முறைப்படி அமைக்கப்பட்டதனால் எமது நாட்டில் உள்ள ஆலயங்களைப் போன்றல்லாது கொடி தம்பமானது ஆலயத்தின் தம்பமண்டபத்தில் அல்லாது வெளிவீதியில் அமைந்துள்ளது. அதனையும் பலிபீடத்தையும் தரிசித்து சென்றால் ஆலய சிறிய முகப்பில் ஸ்ரீலஷ்மி நாராயணர் சமேதராக காட்சி தருகின்றார்கள். அதுமட்டு மே இந்த ஆலயத்தில் இயல்பான பல வர்ணங்களால் ஆலங்கரிக்கப்பட்டசிற்பமாகவுள்ளன மற்றய சிற்பங்கள் அனைத்தும் மஞ்சள் நிற வர்ணப்பூச்சுடனே காட்சி தருவதும் சிறப்பு.