மாத்தளை முத்துமாரியம்மன் கோவில் இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோவில் ஆகும். இது கண்டியில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள மாத்தளை நகரப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது.
இலங்கையில் இந்த ஆலயமே ஐந்து தேர்களைக் கொண்டுள்ளது, தவிர இலங்கையில் மிகவுயரமான 108 அடி உயரமான இராஜகோபுரமும் அமைந்துள்ளது.